/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை
குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை
குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை
குடிநீருடன் சாக்கடை நீர் நடவடிக்கைக்கு கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2024 12:42 AM

கோவை;குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, சாய்பாபா காலனி(வார்டு எண், 44)ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்கு வாரம் ஒரு முறை குடிநீர் வினியாகிக்கப்படுகிறது. கடந்த வாரம், இவ்வார்டுக்கு உட்பட்ட குப்பகோணாம்புதுார் அண்ணா நகர் பகுதியில் குடிநீரில், சாக்கடை கழிவுநீர் கலந்து வந்துள்ளது.
இதைக்குடித்த சிலருக்கு வாந்தி ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இந்நிலையில், கடந்த சில தினங்களாக, 44வது வார்டுக்குட்பட்ட, கே.கே.புதுார் மணியம் மருதுகுட்டி வீதியிலும், குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.