/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும்' 'தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும்'
'தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும்'
'தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும்'
'தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்கவும்'
ADDED : ஜூன் 30, 2024 02:08 AM
மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் செந்நிறமாக தண்ணீர் வருவதால், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அமுதா தெரிவித்துள்ளார்.
பவானி ஆற்றில் இருந்து, தண்ணீர் எடுத்து, அதை சாமாண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில், சுத்தம் செய்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரை, படிகாரம், குளோரின் ஆகியவற்றை கலந்து சுத்தம் செய்யப்படுகிறது. அந்த குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், மழை பெய்து வருவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வரும் தண்ணீர், செந்நிறமாக வருகிறது.
தண்ணீரை சுத்தம் செய்தாலும், நிறம் மாறாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்கவும். சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி கமிஷனர் அமுதா கூறியுள்ளார்.