/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ளஐந்து அதிகாரிகள் அதிரடி மாற்றம் துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ளஐந்து அதிகாரிகள் அதிரடி மாற்றம்
துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ளஐந்து அதிகாரிகள் அதிரடி மாற்றம்
துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ளஐந்து அதிகாரிகள் அதிரடி மாற்றம்
துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ளஐந்து அதிகாரிகள் அதிரடி மாற்றம்
ADDED : ஜூலை 30, 2024 01:28 AM
கோவை;கோவை மாவட்டத்தில் துணை கலெக்டர் அந்தஸ்திலுள்ள ஐந்து அதிகாரிகள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா இருகூர் தேவாங்கொந்தி பைப்லைன் திட்டத்துக்கு பதிலாக திருவாரூர் கோட்டாட்சியர் சங்கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
வழங்கல் துறையில் பணிபுரிந்த குணசேகரன், ஈரோடு மாவட்ட மாநில வாணிபக்கழகம் கிடங்கு மாவட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்ட கலால் துறை உதவி கமிஷனர் ஜீவரேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற நிலவரி உதவிகமிஷனராக இருந்த இளவரசி சென்னையிலுள்ள மின்ஆளுமை இயக்குனரக கணினி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் திருப்பூர் தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளராக மாறுதல் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் கலால்துறை உதவிக்கமிஷனர் ராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் கவிதா, சென்னை மறு குடியமர்வு அலுவலராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,'' ஒவ்வொரு அதிகாரிகளும் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது.சிலர் ஒன்றரை மற்றும் இரண்டாண்டுகளை கடந்துவிட்டனர்
இருப்பினும் பணி நிலை கருதி அவர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றனர்.