/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/துாய்மை பணியாளர்களின் கணக்கு கேட்டால்... 'கிர்'ன்னு தலைசுத்துது!குப்பை சேகரிக்கும் பணியில் தொடரும் குழப்பம்துாய்மை பணியாளர்களின் கணக்கு கேட்டால்... 'கிர்'ன்னு தலைசுத்துது!குப்பை சேகரிக்கும் பணியில் தொடரும் குழப்பம்
துாய்மை பணியாளர்களின் கணக்கு கேட்டால்... 'கிர்'ன்னு தலைசுத்துது!குப்பை சேகரிக்கும் பணியில் தொடரும் குழப்பம்
துாய்மை பணியாளர்களின் கணக்கு கேட்டால்... 'கிர்'ன்னு தலைசுத்துது!குப்பை சேகரிக்கும் பணியில் தொடரும் குழப்பம்
துாய்மை பணியாளர்களின் கணக்கு கேட்டால்... 'கிர்'ன்னு தலைசுத்துது!குப்பை சேகரிக்கும் பணியில் தொடரும் குழப்பம்
மாற்றுப்பணிக்கு உத்தரவு
குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்கியதால், மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 2,200 பேருக்கு மாற்றுப்பணி ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, குப்பையில் உரம் தயாரிக்கும் பணி, மழை நீர் வடிகால் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இவ்ளோ பேர் இருக்காங்களா
மாநகராட்சி நிர்வாகத்தால் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளதன் அடிப்படையில் கணக்கிட்டால், தனியார் நிறுவன ஊழியர்கள் - 3,442, நிரந்தர பணியாளர்கள் - 2,200, மழை நீர் வடிகால் துார்வாருவதற்கான ஒப்பந்த பணியாளர்கள் - 845 என, மொத்தம், 6,487 துாய்மை பணியாளர்கள் பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. சராசரியாக ஒரு வார்டுக்கு, 64 பேர் வீதம் நியமிக்க வேண்டும். அவ்வாறு தொழிலாளர்கள் பணியில் இல்லை; நகரில் ஆங்காங்கே குப்பை தேங்கியிருக்கிறது. 'பளீச்' கோவை இன்னும் உருவாகவில்லை. மாநகராட்சியில் என்ன தான் நடக்கிறது என்கிற குழப்பமான நிலை காணப்படுகிறது.