/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறுலான ரோடால் விபத்து மலைப்பாதையில் சிக்கல் குறுலான ரோடால் விபத்து மலைப்பாதையில் சிக்கல்
குறுலான ரோடால் விபத்து மலைப்பாதையில் சிக்கல்
குறுலான ரோடால் விபத்து மலைப்பாதையில் சிக்கல்
குறுலான ரோடால் விபத்து மலைப்பாதையில் சிக்கல்
ADDED : ஜூலை 14, 2024 03:43 PM

வால்பாறை:
வால்பாறை மலைப்பாதையை விரிவுபடுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை - ஆழியாறு செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
இந்த பாதையில், சில இடங்களில் ரோடு விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல், சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா பகுதியான வால்பாறைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வானங்கள் வருகின்றன. இருசக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரை இந்த ரோட்டில் தான் இயக்கப்படுகின்றன.
மலைப்பாதையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, குறுகலான பகுதிகளை விரிவுபடுத்த வேண்டும். மழை நீர் வடிந்து செல்லும் பகுதிகளில் பாலம், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.