/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆயுதங்களுடன் ஐந்து பேர் கும்பல் கைதுஆயுதங்களுடன் ஐந்து பேர் கும்பல் கைது
ஆயுதங்களுடன் ஐந்து பேர் கும்பல் கைது
ஆயுதங்களுடன் ஐந்து பேர் கும்பல் கைது
ஆயுதங்களுடன் ஐந்து பேர் கும்பல் கைது
ADDED : ஜூலை 14, 2024 05:20 PM
கோவை:
கோவையின் பல்வேறு பகுதிகளிலும், கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த ஐந்து பேர் அடங்கிய கும்பைலை, போலீசார் கைது செய்தனர்.
கோவை கரும்புக்கடை போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில், சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த ஐந்து பேரை பிடித்த போலீசார், சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
அவர்களை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமது யாசீர்(22), சுண்ணாம்பு காளவாயை சேர்ந்த முகமது அனாஸ், 23, இப்ராஹிம், 36, சுகுணாபுரத்தை சேர்ந்த சர்புதீன், 23, ஈரோடு கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த முகமது வாசீம், 19 எனத் தெரிந்தது.
போலீசார் கூறுகையில், 'இவர்கள் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் நடந்து செல்லும் போது, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் மொபைல்போன்களை பறிக்க திட்டமிட்டிருந்தனர். ஐந்து பேர் மீதும் ஏற்கனவே கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன' என்றனர்.
ஐந்து பேரையும் சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து ஐந்து கத்திகள், மூன்று மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.