/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை எடுப்பதில்லை ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சரமாரி புகார் சார் படம் உண்டு குப்பை எடுப்பதில்லை ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சரமாரி புகார் சார் படம் உண்டு
குப்பை எடுப்பதில்லை ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சரமாரி புகார் சார் படம் உண்டு
குப்பை எடுப்பதில்லை ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சரமாரி புகார் சார் படம் உண்டு
குப்பை எடுப்பதில்லை ஊராட்சி அலுவலகத்தில் மக்கள் சரமாரி புகார் சார் படம் உண்டு
ADDED : ஜூலை 16, 2024 11:11 PM

அன்னூர்:'குப்பை எடுப்பதில்லை. கழிவுநீர் வடிகால் வசதி இல்லை,' என அம்மன் நகர் மக்கள், ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
ஒட்டர்பாளையம் ஊராட்சி, அம்மன் நகரில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் நேற்று ஒட்டர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் சுமதியிடம் சரமாரியாக புகார் தெரிவித்து பேசுகையில்,' எங்கள் பகுதியில், வாரக் கணக்கில் குப்பை எடுக்க வருவதில்லை. வீடுகளுக்கு முன்பு குப்பையை குவித்து வைத்துள்ளோம். பிரதான சாலையில் குப்பையை போட்டாலும் அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வடிகால் இல்லாததால் கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.
குடிநீர் குறைந்த நேரமே வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை தற்போது குண்டும் குழியுமாக மழை பெய்தால் குளம் போல் நீர் தேங்கி நிற்கிறது. இப்பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
ஊராட்சி தலைவர், உரிய நடவடிக்கை எடுக்கிறேன், என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தரும்படி பலமுறை தெரிவித்தும் விழிப்புணர்வு இல்லை. சேர்த்து தருகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை தராதீர்கள் என்று கூறினால் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் குறைந்தது பத்து பிளாஸ்டிக் கவர்களை வெளியில் போடுகின்றனர். எங்கள் ஊராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரிக்க போதிய இட வசதி இல்லை,' என்றனர்.