Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு பழுது பார்க்கும் திட்டம் அன்னுாருக்கு ஒதுக்கீடு குறைவு

வீடு பழுது பார்க்கும் திட்டம் அன்னுாருக்கு ஒதுக்கீடு குறைவு

வீடு பழுது பார்க்கும் திட்டம் அன்னுாருக்கு ஒதுக்கீடு குறைவு

வீடு பழுது பார்க்கும் திட்டம் அன்னுாருக்கு ஒதுக்கீடு குறைவு

ADDED : ஜூலை 19, 2024 02:58 AM


Google News
அன்னுார்;அரசு வழங்கிய வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 878 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் அன்னுாருக்கு ஒதுக்கீடு குறைவு என்று புகார் எழுந்துள்ளது.

தமிழக அரசு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய வீடுகளை பழுது பார்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு என இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் வீடுகளை பழுது பார்க்க 2000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக பணி உத்தரவு வழங்க வேண்டும்.

பணி உத்தரவு பெற்ற 14 நாட்களுக்குள் பயனாளி பணியை துவக்க வேண்டும். இல்லாவிட்டால் பணி உத்தரவு ரத்து செய்யப்படும். பயனாளியே பழுது பார்க்கும் பணியை செய்து கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான இரும்பு கம்பி, சிமெண்ட் ஆகியவை துறை வாயிலாக வழங்கப்படும். அதற்கான தொகை அந்த நிதியில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.

இரண்டு தவணைகளாக நிதி வழங்கப்படும். பயனாளிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் ஓட்டு வீடுகள் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் சிறுபழுது பார்க்க 14 வீடுகளும், பெரிய அளவில் பழுது பார்க்க நீக்க 214 வீடுகளும் என 218 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அன்னுார் ஒன்றியத்திற்கு மூன்று வீடுகள் மட்டுமே இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளது

இதையடுத்து சாய்தள வீடுகளை பழுது பார்க்கும் திட்டத்தில் சிறு பழுது பார்க்க 376 வீடுகளும், பெரிய அளவில் பழுது பார்க்க 284 வீடுகளும், என 660 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அன்னுார் ஒன்றியத்தில் 24 வீடுகள் மட்டுமே இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளது.

இது குறித்து வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது :

அரசு 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தில் பழுது பார்க்க நிதி வழங்கப்படும் என நிபந்தனை விதித்துள்ளது.இந்த நிபந்தனையை தளர்த்தி, 10 ஆண்டுகளான வீடுகளையும் பழுதுபார்க்க நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us