/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இ -நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்கள் விற்பனை இ -நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்கள் விற்பனை
இ -நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்கள் விற்பனை
இ -நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்கள் விற்பனை
இ -நாம் திட்டத்தின் மூலம் விளைபொருட்கள் விற்பனை
ADDED : ஜூலை 19, 2024 02:58 AM
சூலுார்;சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழன் தோறும் இ - நாம் திட்டத்தின் வாயிலாக ஏலம் நடக்கிறது. பண்ணை வாயில் முறையில் விவசாயிகளின் தோட்டத்துக்கு சென்று விவசாயிகளின் விளைபொருட்கள் விற்பனை செய்து தரப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேங்காய், தேங்காய் பருப்பு, வாழை, பூசணி தக்காளி உள்ளிட்ட விளைபொருட்கள் விற்பனையாகின்றன.
இத்திட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்., முதல் தற்போது வரை, 137 விவசாயிகளிடம் இருந்து 390 மெட்ரிக் டன் விளை பொருட்கள், 72 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப விளை பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுவதாலும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு பணம் வந்து சேருகிறது. அதனால், விவசாயிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.