/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

ஆன்மிக சொற்பொழிவு
கட உபநிஷத் பாஷ்யம், ஆர்ஷ அவினாஷ் பவுண்டேஷன், டாடாபாத் மூன்றாவது வீதி, மாலை, 5:00 மணி.
தொழில்நுட்ப கருத்தரங்கு
இந்திய மேம்பாட்டு அமைப்பு சார்பில், ஸ்டெம் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகளை விளக்கும் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு, பீளமேடு கிருஷ்ணம்மாள் கல்லுாரியில் காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பங்கேற்று, விளக்கம் அளிக்கவுள்ளனர்.
உற்பத்தி குழு கூட்டம்
கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் காலை, 9:30 மணிக்கும், தொடர்ந்து விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், 10:30 மணிக்கும் நடக்கிறது.
உறவுகளின் வலிமை
திருக்குறள் உலகம் கல்விச்சோலை அமைப்பு சார்பில், 'உறவுகளின் நன்மையும் வலிமையும்' என்ற கருத்தரங்கு நடைபெறவுள்ளது. மாலை, 6:30 முதல் 8:00 மணி வரை நடக்கிறது. இந்நிகழ்வு, மலர் அங்காடி பகுதியில் உள்ள, சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
பல குடும்பங்களின் கனவுகளை சீரழிக்கும், குடிப்பழக்கம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை குறித்த நிகழ்வு, புனித ஜோசப் சர்ச், போத்தனுாரில் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது.