/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லீரல், கணைய நோய்க்கு நவீன சிகிச்சை கருத்தரங்கு கல்லீரல், கணைய நோய்க்கு நவீன சிகிச்சை கருத்தரங்கு
கல்லீரல், கணைய நோய்க்கு நவீன சிகிச்சை கருத்தரங்கு
கல்லீரல், கணைய நோய்க்கு நவீன சிகிச்சை கருத்தரங்கு
கல்லீரல், கணைய நோய்க்கு நவீன சிகிச்சை கருத்தரங்கு
ADDED : ஜூன் 29, 2024 01:28 AM

கோவை;கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனையில், கணையம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள், நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
இதில், அமெரிக்கா யேல் பல்கலை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று, நோய்கள் குறித்து விவாதித்தனர். யேல் பல்கலை தெரபியூட்டிக் எண்டோஸ்கோபி துறை இயக்குனர் திருவேங்கடம், இத்துறையில் ஏற்பட்டு வரும், நவீன முன்னேற்றங்கள் குறித்தும், அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் பருமனை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
கணையம், கல்லீரல் தொடர்பான பல்வேறு சிக்கலான கேஸ்கள் குறித்து, விவாதமும் நடைபெற்றன. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
கே.எம்.சி.எச்., இயக்குனர் அருண் பழனிசாமி, அதிநவீன எண்டோஸ்கோபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, ஒரு பிரத்யேக மற்றும் உலகத்தரமான தனிப்பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார்.