/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுரங்க பாதை சாலை சீரமைப்பு பணி துவக்கம் சுரங்க பாதை சாலை சீரமைப்பு பணி துவக்கம்
சுரங்க பாதை சாலை சீரமைப்பு பணி துவக்கம்
சுரங்க பாதை சாலை சீரமைப்பு பணி துவக்கம்
சுரங்க பாதை சாலை சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 19, 2024 03:04 AM

மேட்டுப்பாளையம்;கண்ணார்பாளையம் காளட்டியூர் ரயில்வே சுரங்க பாதையில் சாலை, குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்த நிலையில், தற்போது தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சாலையை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
காரமடை அருகே கோட்டை பிரிவில் இருந்து கண்ணார்பாளையம் வரும் வழியில் காளட்டியூர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி அன்னூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.
இவ்வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மழை காலங்களில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சுரங்க பாதை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ஆனது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது இச்சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுரங்க பாதை சாலையை தென்னக ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. சுரங்க பாதையில் உள்ள மழைநீர் வடிகாலும் சீரமைக்கப்படும், என்றார்.