/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜடையம்பாளையம் புதூரில் இன்று சுமங்கலி பூஜை ஜடையம்பாளையம் புதூரில் இன்று சுமங்கலி பூஜை
ஜடையம்பாளையம் புதூரில் இன்று சுமங்கலி பூஜை
ஜடையம்பாளையம் புதூரில் இன்று சுமங்கலி பூஜை
ஜடையம்பாளையம் புதூரில் இன்று சுமங்கலி பூஜை
ADDED : ஜூலை 19, 2024 02:59 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பன்னிரண்டாம் ஆண்டு வெள்ளிக்கிழமை பூஜையும், சுமங்கலி பூஜையும் இன்று நடைபெற உள்ளது.
காலை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் அன்னை வேள்வி வழிபாடுடன் சுமங்கலி பூஜை துவங்குகிறது. 11:00 மணிக்கு அன்னைக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற உள்ளது. 12:00 மணிக்கு அலங்கார ஆராதனையும், பேரொளி வழிபாடும், சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பழனிசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்குபெற உள்ளனர்.