/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 30, 2024 02:11 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் உடைப்பு ஏற்பட்டதையடுத்து சீரமைக்கும் பணி நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் ஆறு அருகே உள்ள நகராட்சி நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து கொண்டு வரப்படும் குடிநீர், மார்க்கெட் ரோட்டில் உள்ள நீர் உந்து நிலையம் வழியாக, மேல்நிலை தொட்டிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஜமீன் ஊத்துக்குளி அருகே ரயில்வே கேட் பகுதியில் நீர் உந்து நிலையத்துக்கு செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதையடுத்து, குடிநீர் வினியோகத்தை நிறுத்தி, சீரமைக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். குடிநீர் வினியோகம் பாதிக்காமல் இருக்க, உடனடியாக சீரமைக்கப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.