Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? மேல்முறையீடு செய்தவர்கள் காத்திருப்பு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? மேல்முறையீடு செய்தவர்கள் காத்திருப்பு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? மேல்முறையீடு செய்தவர்கள் காத்திருப்பு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா? மேல்முறையீடு செய்தவர்கள் காத்திருப்பு

ADDED : ஜூன் 29, 2024 01:27 AM


Google News
கோவை;கோவை மாவட்டத்தில் உரிமைத்தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில், யார் யாருக்கெல்லாம் மாதாந்திர நிதியுதவி கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கடந்தாண்டு செப்., மாதம் துவக்கப்பட்டது; நிபந்தனைக்கு உட்பட்டு, தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், முதல்கட்டமாக, நான்கு லட்சத்து, 46 ஆயிரத்து, 340 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிலுவை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 20 ஆயிரத்து, 414 பேர் சேர்க்கப்பட்டு, நான்கு லட்சத்து, 60 ஆயிரத்து, 760 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் சமயத்தில், அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி கூறியிருந்ததால், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அவர்களை சமரசம் செய்யும் வகையில், மேல்முறையீடு செய்வதற்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும், 66 ஆயிரத்து, 301 பேர் மேல்முறையீடு செய்தனர். அம்மனுக்களை பரிசீலனை செய்ததில், 954 மட்டும் 1தகுதியானவையாக ஏற்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இப்பயனாளிகள், தமிழக அரசின் வேறு திட்டங்களில் பயனடைந்து வருகிறார்களா என்று ஆய்வு செய்யப்பட்டு, தற்போது, 814 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல்முறையீடு செய்தவர்களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்து, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதனால், உரிமைத்தொகை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பில், மேல்முறையீடு செய்தவர்கள் காத்திருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us