/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பில்லூர் 3வது குடிநீர் திட்டம் இன்று துவக்கம் :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா?பில்லூர் 3வது குடிநீர் திட்டம் இன்று துவக்கம் :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா?
பில்லூர் 3வது குடிநீர் திட்டம் இன்று துவக்கம் :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா?
பில்லூர் 3வது குடிநீர் திட்டம் இன்று துவக்கம் :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா?
பில்லூர் 3வது குடிநீர் திட்டம் இன்று துவக்கம் :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா?
ADDED : பிப் 10, 2024 09:20 PM
கோவை:கோவை மாநகராட்சிக்கான பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், கோவையில் இன்று (11ம் தேதி) துவக்கி வைக்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்து, நிதி ஒதுக்கிய திட்டம் என்பதால், இவ்விழாவுக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
கோவை மாநகராட்சி பகுதிக்கான, ரூ.780 கோடியில் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ.362.20 கோடியில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கான அன்னுார், சூலுார், அவிநாசி ஒன்றியங்களை சேர்ந்த, 708 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம், இன்று (பிப்., 11ம் தேதி) துவக்கி வைக்கப்படுகிறது.
சரவணம்பட்டி குமரகுரு பொறியியல் கல்லுாரி அருகில் நடக்கும் இவ்விழாவில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திட்டங்களை துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மா.கம்யூ., கட்சியை சேர்ந்த கோவை எம்.பி., நடராஜன், பா.ஜ,வை சேர்ந்த தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழில், அனைவரது பெயர்களும் அச்சடிக்கப்பட்டு உள்ளன.
இவ்விரு திட்டங்களும், அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு துவங்கப்பட்டவை. தி.மு.க., ஆட்சியில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே, இப்பணிகளை முடித்து திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
அ.தி.மு.க., அரசு அறிவித்த திட்டங்கள் என்பதால், இன்று நடைபெறும் துவக்க விழாவுக்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.