/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கையில ரொக்கமா தாங்க... ஜி பே-வில் திருப்பித் தர்றோம்! 'பலே' தம்பதி கைது கையில ரொக்கமா தாங்க... ஜி பே-வில் திருப்பித் தர்றோம்! 'பலே' தம்பதி கைது
கையில ரொக்கமா தாங்க... ஜி பே-வில் திருப்பித் தர்றோம்! 'பலே' தம்பதி கைது
கையில ரொக்கமா தாங்க... ஜி பே-வில் திருப்பித் தர்றோம்! 'பலே' தம்பதி கைது
கையில ரொக்கமா தாங்க... ஜி பே-வில் திருப்பித் தர்றோம்! 'பலே' தம்பதி கைது
ADDED : ஜூன் 19, 2025 11:52 PM
கோவை : தெலுங்குபாளையம், ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சக்திவேல், 54; நல்லாம்பாளையம் ரோடு, சங்கனுாரில் இறைச்சி கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 15ம் தேதி இரவு கடையில் வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டிக் கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் இருவர் வந்தனர்.
சக்திவேலிடம் மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அருகில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால் பணம் எடுக்க முடியவில்லை எனக் கூறினர்.
'ஜி பே'வில் பணம் அனுப்புகிறோம், கையில் ரொக்கமாக கொடுத்து உதவ முடியுமா என கேட்டுள்ளனர். சக்திவேல் முதலில் அவர்களுக்கு ரூ. 2,000 கொடுத்தார். அவர்கள், 'ஜி பே'வில் அனுப்பியது போல், ஒரு 'ஸ்கிரீன்ஷாட்' காண்பித்தனர்.
மேலும், 2,000 ரூபாய் தேவைப்படுவதாக கூறி, மீண்டும் பணத்தை பெற்று அதற்கு பதிலாக 'ஜி பே'வில் அனுப்பியதை காண்பித்தனர்.
பணத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு சக்திவேல் தனது வங்கிக் கணக்கை பரிசோதித்து பார்த்தபோது பணம் வராதது தெரியவந்தது. அப்போது, தான் அவர்கள் பணம் அனுப்பியது போல் போலியாக 'ஸ்கிரீன்ஷாட்' காண்பித்து தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.
சம்பவம் குறித்து சக்திவேல் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில் பண மோசடியில் ஈடுபட்டது சுகுணாபுரத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான், 21 மற்றும் அவரது மனைவி ஷர்மிளா பானு, 20 என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.