ADDED : ஜூன் 19, 2025 11:51 PM
கோவை, : இந்திய பொதிவாக்க தொழில்நுட்பக் கழகம் மற்றும் கோவை மாவட்ட தொழில் மையம் இணைந்து, பேக்கேஜிங் தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கு, கோவையில் வரும் 27ம் தேதி நடத்துகிறது.
இதில் பங்கேற்க, பேக்கேஜிங் முறையை கையாளும் தொழில் நிறுவனங்கள் அடங்கிய சங்கங்களுக்கு, மாவட்ட தொழில் மையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள தொழில் முனைவோரும் பங்கேற்கலாம். முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு: 89255 33934, 89255 33936.