/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சி.ஐ.ஐ., சார்பில் சி.எப்.ஓ., அமைப்பு சி.ஐ.ஐ., சார்பில் சி.எப்.ஓ., அமைப்பு
சி.ஐ.ஐ., சார்பில் சி.எப்.ஓ., அமைப்பு
சி.ஐ.ஐ., சார்பில் சி.எப்.ஓ., அமைப்பு
சி.ஐ.ஐ., சார்பில் சி.எப்.ஓ., அமைப்பு
ADDED : செப் 26, 2025 05:46 AM

கோவை; இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., கோவை- நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரிவு சார்பில், சி.எப்.ஓ., அமைப்பு துவக்கப்பட்டது.
தொழில்நிறுவனங்களின் தலைமை நிதி அதிகாரிகள், நிதிப் பிரிவு தலைவர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் இணைக்கும் அமைப்பாக 'சி.எப்.ஓ., போரம்' செயல்படும். கோவை தொழிற்துறை சூழலை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் நிதி சார்ந்த, சிறந்த நடைமுறைகள், ஒருங்கிணைந்த கற்றல், நிதி நுட்பம், கொள்கை ஆலோசனைகள் ஆகியவற்றை இந்த அமைப்பு வழங்கும்.
சி.ஐ.ஐ., கோவை துணைத் தலைவர் நவ்ஷத், இந்த அமைப்பை துவக்கி வைத்து, இலச்சினையை வெளியிட்டார். சி.ஐ.ஐ., நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரிவின் கன்வீனர் பினு பவுலோஸ், இணை கன்வீனர்கள் மதன் மோகன், மஞ்சுநாத், எல்.ஜி.பி., நிறுவன தலைமை நிதி அதிகாரி ரெங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்வின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி., 2.0 மற்றும் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் குறித்த அறிவுப்பகிர்வு நிகழ்வு நடந்தது.