/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உத்தரவு ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உத்தரவு
ரூ.2.5 லட்சம் இழப்பீடு வழங்க சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : செப் 26, 2025 05:45 AM
கோவை; சிங்காநல்லுார், உப்பிலிபாளையத்தை சேர்ந்த கதிரவன், 'கே 2 பார்ம்ஸ்' என்ற பெயரில், நாட்டு கோழி பண்ணை வைத்துள்ளார். இவரது நிறுவன கணக்கு விபரங்களை பதிவு செய்ய, விளாங்குறிச்சியில் உள்ள, 'ஜீவித் டெக்னாலஜிஸ்' என்ற நிறுவனத்தை அணுகி, கணினி மென்பொருள் உருவாக்கக் கோரினார். இதற்காக, 24.77 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினார்.
ஆனால், மென்பொருள் பயன்படுத்தியபோது, பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, பெரும்பாலான பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இழப்பீடு வழங்கக்கோரி, கோவை நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த கூடுதல் ஆணையர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'சாப்ட்வேர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மென்பொருள் மேம்பாட்டுக்கு கட்டணமாக பெற்ற தொகை, 24.77 லட்சம் ரூபாய் திரும்ப வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 2.5 லட்சம் ரூபாய், வழக்கு செலவு 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.