Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தை பாதுகாப்பு சேவை மையம்; களப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தை பாதுகாப்பு சேவை மையம்; களப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தை பாதுகாப்பு சேவை மையம்; களப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தை பாதுகாப்பு சேவை மையம்; களப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : செப் 26, 2025 05:30 AM


Google News
கோவை; மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும், குழந்தைகள் சேவை மையத்தில் (1098) காலியாகவுள்ள களப்பணியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குழந்தைகள் நலன் மற்றும் சேவைத்துறையின் கீழ், ' மிஷன் வத்சால்யா ' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்வதுடன், பள்ளி குழந்தைகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சேவை மைய களப்பணியாளர்கள் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். தொகுப்பூதியமாக, 18ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. மகளிர் திட்டம், குழந்தைகள் நலன், சமூக நலத்துறை ஆகிய பிரிவுகளில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் இயக்கும் திறன் கொண்டு இருப்பதுடன்; 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.

நேர்முக தேர்வு வாயிலாக, இப்பணியிடம் நிரப்பப்படும். தகுதியுள்ளவர்கள், https:/coimbatore.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்., 10ம் தேதி மாலை, 5:45 மணிக்குள், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை, 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை-641 018' என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us