/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வந்தாச்சு 'ரோபோடிக்' இயந்திரம்: குறையணும் சாக்கடை மரணம்வந்தாச்சு 'ரோபோடிக்' இயந்திரம்: குறையணும் சாக்கடை மரணம்
வந்தாச்சு 'ரோபோடிக்' இயந்திரம்: குறையணும் சாக்கடை மரணம்
வந்தாச்சு 'ரோபோடிக்' இயந்திரம்: குறையணும் சாக்கடை மரணம்
வந்தாச்சு 'ரோபோடிக்' இயந்திரம்: குறையணும் சாக்கடை மரணம்
ADDED : ஜன 27, 2024 11:21 PM

கோவை:சாக்கடை அடைப்பை நீக்க வாங்கப்பட்ட, 'ஜென் ரோபோடிக்' இயந்திரங்கள் இரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கோவையில் சாக்கடை அடைப்பை நீக்க, நான்கு ஆண்டுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து ஐந்து 'ஜென் ரோபோடிக்' இயந்திரங்கள், மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டன.
துவக்கத்தில் பயன்படுத்தப்பட்ட, இந்த இயந்திரங்கள் நாளடைவில் கிடப்பில் போடப்பட்டன. கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதையடுத்து,கடந்த மன்ற கூட்டத்தில், இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கமிஷனர் தெரிவித்திருந்தார்.
மநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணியில் ஆட்களை பயன்படுத்தக்கூடாது என்பதால், இதற்கென ஐந்து 'ரோபோடிக்' இயந்திரங்கள் வாங்கப்பட்டன.
அவை,ஐந்து மண்டலங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன; இதனால், அடைப்பு நீக்கும் பணிகள் எளிதாகிவிடும்' என்றனர்.
இவ்வளவு லட்சம் செலவிலான இந்த இயந்திரங்களை, மீண்டும் கிடப்பில் போடாமல் பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சிக்கு உள்ளது.