ADDED : ஜூன் 19, 2025 05:47 AM
மோட்டார் பைக் திருடியவர்கள் கைது
அன்னூர் அ.மு.காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. தனியார் மில் சூப்பர்வைசர். கடந்த 13ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் பைக்கை நிறுத்தி இருந்தார். மறுநாள் அதிகாலையில் பார்த்த போது பைக்கை காணவில்லை.
அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த எஸ்.ஐ., அழகேசன், முதல் நிலை காவலர் கருணாகரன் ஆகியோர் பைக் திருடிய பதுவம்பள்ளியைச் சேர்ந்த வினித் குமார், 22. தேக்கம்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமார், 26. ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் கட்டட தொழிலாளிகள் எனவும், பைக்கை திருடியதும், தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது. இருவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.