/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுலா தினம் முன்னிட்டு மேம்பாட்டு பயிற்சி முகாம் சுற்றுலா தினம் முன்னிட்டு மேம்பாட்டு பயிற்சி முகாம்
சுற்றுலா தினம் முன்னிட்டு மேம்பாட்டு பயிற்சி முகாம்
சுற்றுலா தினம் முன்னிட்டு மேம்பாட்டு பயிற்சி முகாம்
சுற்றுலா தினம் முன்னிட்டு மேம்பாட்டு பயிற்சி முகாம்
ADDED : செப் 26, 2025 05:50 AM
கோவை; செப். 27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஸ்கால் இணைந்து, சொந்தமாக கார் வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கான ஒரு நாள் ஆளுமை மேம்பாட்டு பயிற்சி முகாம், நாளை (27ம் தேதி) நடக்கிறது.
பயிலரங்களில் சுற்றுலா தொடர்பான தொடர்பு திறன், பயணிகள் சேவை முறைகள், தனிநபர் ஆளுமை மேம்பாடு உட்பட பல்வேறு தலைப்புகள் குறித்து நிபுணர்கள் வழிகாட்டுதலுடன், பயிற்சி பெற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள சொந்த கார் ஓட்டுனர்கள், தங்கள் பெயரை முன்பதிவு செய்து பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலரையோ அல்லது 0422 - 2303176, 89398 96380 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.