/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பூட்டிய காரில் உயிரிழந்து கிடந்த பாத்திரக்கடைக்காரர் பூட்டிய காரில் உயிரிழந்து கிடந்த பாத்திரக்கடைக்காரர்
பூட்டிய காரில் உயிரிழந்து கிடந்த பாத்திரக்கடைக்காரர்
பூட்டிய காரில் உயிரிழந்து கிடந்த பாத்திரக்கடைக்காரர்
பூட்டிய காரில் உயிரிழந்து கிடந்த பாத்திரக்கடைக்காரர்
ADDED : செப் 23, 2025 09:06 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பூட்டிய காரில் இருந்து உயிரிழந்த நிலையில் பாத்திரக்கடைகாரர் உடல் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 42. பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் கோவை மாவட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனியில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். அதில் அவரது அம்மா வசித்து வருகிறார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பிய செந்தில்குமார், அம்மாவை பார்க்க செல்வதாக, தனது மனைவியிடம் சொல்லிவிட்டு வந்துள்ளார். இதனிடையே காரமடை நகராட்சி அலுவலகம் முன் தனது காரை நிறுத்திய செந்தில், அதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை பூட்டிய காரின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீச, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை போலீசார் விரைந்து சென்று, செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமார் காரமடை நகராட்சி அலுவலகம் முன் எதற்காக காரை நிறுத்தினார், உயிரிழந்தது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.