
செய்முறை:
முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின், முட்டைகளின் ஓடுகளை எடுத்து விட்டு, அதனை துருவிக் கொள்ள வேண்டும்.
அதனை, ஒரு பவுலில் போட்டுக் கொண்டு அதில், கடலை மாவு, வெங்காயம், மல்லித்தழை, மிளகுத்துாள், கரம் மசாலா துாள், மிளகாய் துாள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்துக்கொள்ள வேண்டும்.
தேவையான அளவு உப்பு, காரம் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ளலாம்.இப்போது பிசைந்த கலவையினை ஒரே மாதிரியான வடிவங்களில், உருண்டையாகவோ, சதுரமாகவோ தயார் செய்து கொள்ளவும்.
இதை ஒவ்வொன்றாக பிரட் தூளில் பிரட்டி விட்டு, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்த பின், தீயினை மிதமாக குறைக்கவும்.
தயார் செய்து உருண்டைகள், எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான சுவையில் முட்டை கபாப் ரெடி! இதனை சாஸ் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகஇருக்கும்.