ADDED : மார் 18, 2025 04:07 AM
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும், 29ம் தேதி நடைபெற உள்ளது.
தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனத்தினர் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், முகாமில் பங்கேற்க, www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
- நமது நிருபர் -