/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது''கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது'
'கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது'
'கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது'
'கொலு வைப்பதால் மன அமைதி கிடைக்கிறது'

திவ்யா, ஆர்.எஸ்.புரம் கிழக்கு
40 ஆண்டுகளுக்கும் மேலாக கொலு வைத்து வருகிறோம். கொலு வைப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறது. முன்னோர் கொடுத்த பொம்மைகளை பல தலைமுறைகளாக பாதுகாப்பாக கொண்டு செல்வது நல்வழியை ஏற்படுத்தும்.
மாலினி, தடாகம் ரோடு
கொலு என்றாலே மன அமைதியை தரக்கூடியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பூஜைகள் செய்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கும்போது, ஆத்ம திருப்தி கிடைக்கும். 50 ஆண்டுக்கும் மேலான முருகன், வள்ளி, தெய்வானை பொம்மை வைத்துள்ளோம்.
சாந்தி, தடாகம் ரோடு
கொலு வைப்பதன் மூலம் வீட்டுக்கு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வர முடியும். எங்கள் கொலுவில் அஷ்டலட்சுமி, நவவிநாயகர் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பொம்மைகளை இன்றும் பாதுகாத்து வருகிறோம்.
வரலட்சுமி, காந்தி பார்க்
எனது அம்மா கொடுத்த, 30 ஆண்டுகள் பழமையான பொம்மைகளை இன்றளவும் பாதுகாத்து கொலுவில் இடம் பெறச் செய்கிறோம். இந்தாண்டு முதல் முறையாக, 'அஸ்ட்ரோநெட்' ரோபோ ஒன்றையும் வைத்துள்ளோம்.