/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுதோறும் நவராத்திரி விழா கொண்டாட்டம்; விதவிதமாக கொலு வைத்து மகளிர் கோலாகலம் வீடுதோறும் நவராத்திரி விழா கொண்டாட்டம்; விதவிதமாக கொலு வைத்து மகளிர் கோலாகலம்
வீடுதோறும் நவராத்திரி விழா கொண்டாட்டம்; விதவிதமாக கொலு வைத்து மகளிர் கோலாகலம்
வீடுதோறும் நவராத்திரி விழா கொண்டாட்டம்; விதவிதமாக கொலு வைத்து மகளிர் கோலாகலம்
வீடுதோறும் நவராத்திரி விழா கொண்டாட்டம்; விதவிதமாக கொலு வைத்து மகளிர் கோலாகலம்
ADDED : செப் 23, 2025 11:20 PM

கோவை; தினமலர் நாளிதழ் சார்பில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கொலு விசிட், ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், பேரூர், பி.என்.புதுார் மற்றும் வடவள்ளி பகுதிகளில் நடந்தது. விதவிதமான கொலு பொம்மைகளால், வீட்டையே கோயி லாக மாற்றியிருந்தனர் நம் வாசகியர். வாசகி கீர்த்திகா ஹரிகரன், வடவள்ளி நவராத்திரி முதல் நாள் முதல் கடைசி நாள் வரை இல்லத்திலும், உள்ளத்திலும் சந்தோஷம் நிறைந்து இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் கொலு பார்க்க வரும் போது, இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்.
வாசகி பாரதி, வடவள்ளி
எங்கள் வீட்டில் பாட்டி காலத்தில் இருந்து கொலு வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் விளக்கு வைத்து பூஜை செய்யும் போது, மனம் நிம்மதி இருக்கும்.
வாசகி ஜெயலட்சுமி, வடவள்ளி
40 ஆண்டுகளாக வீட்டில் கொலு வைக்கிறோம். கஷ்டம் இல்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாசகி லட்சுமி சுதா, வடவள்ளி
நவராத்திரி கொலு வைத்தால் வீடு கோயில் மாதிரி இருக்கும். இத்தனை தெய்வங்கள் நம் வீட்டில் இருக்கும் போது, நமக்கு எந்த கஷ்டமும் வராது என்ற நம்பிக்கை வருகிறது.
வாசகி பானுமதி, வடவள்ளி
வீட்டில் கொலு வைப்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த ஒன்பது நாட்களும் மனம் நிம்மதியாக இருக்கும் .
சவுமியா ராஜவேலு, பி.என்.புதுார்
கொலுவைத்தால் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிமூவரும் நம் வீட்டுக்கு வருவார்கள் என்பது என் நம்பிக்கை.
ஜானகி சுப்ரமணியம், இடையர்பாளையம்
எங்கள் வீட்டில் 50 வருடமாக கொலு வைக்கிறோம். வருடம் தோறும் புதிய பொம்மை செட்டுக்கள் வைப்போம்.
வடவள்ளி, வாசகி அனுபிரபா ராமச்சந்திரன் தன் வீட்டு கொலுவில் அனுமன் செட் வைத்து அசத்தி இருந்தார். அனுமன் சஞ்சீவி மலையை துாக்கி வரும் காட்சி அற்புதமாக இருந்தது.
வாசகி காமாட்சி லதா மும்மூர்த்திகள் செட், காஞ்சி மகா பெரியவர், விவேகானந்தர் என, 100க் கும் மேற்பட்ட பொம்மைகளால் கொலுவை அலங்கரித்து இருந்தார்.
இந்த நவராத்திரி கொலு விழா கொண்டாட்டத்தை, தினமலர் நாளிதழுடன் மெடிமிக்ஸ், மேளம், ரெஜூ ஆயுர், லயா காபி ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.