/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோயில் பிரசாதங்களில் லேபிள்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு கோயில் பிரசாதங்களில் லேபிள்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
கோயில் பிரசாதங்களில் லேபிள்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
கோயில் பிரசாதங்களில் லேபிள்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
கோயில் பிரசாதங்களில் லேபிள்; உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
ADDED : செப் 26, 2025 05:35 AM
கோவை; கோவையில் உள்ள கோயில்களில் பிரசாத ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. லட்டு, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலவகையான பலகாரங்கள் விற்கப்படுகின்றன.
உணவு பாதுகாப்பு துறையின் விதிமுறைக்கு உட்பட்டு பிரசாதங்கள் தயார் செய்ய வேண்டும்.
பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், தயாரிப்பு முறைகளில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்து, உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பூச்சி மேலாண்மை, கழிவு மேலாண்மை, பதிவு சான்று மற்றும் பயிற்சி சான்று காட்சிப்படுத்துதல், பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பண்டிகை காலம் நெருங்குவதால், அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் கோயில்களில் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிரசாதம் தயாரிக்கும் இடங்கள், அன்னதானம், வழங்கும் இடங்கள் சுகாதாரமாகவும், அனைத்து விதிமுறையும் பின்பற்றி இருக்க வேண்டும். அறநிலையத்துறை தயாரித்து வழங்கும் உணவு சார்ந்த பிரசாதமாக இருந்தாலும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட லேபிள் விதிமுறைகளை
''பின்பற்ற வேண்டும். கோயில் அருகே உள்ள கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.