/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சகோதயா கால்பந்து போட்டி; கோப்பை வென்றது விவேகம் சகோதயா கால்பந்து போட்டி; கோப்பை வென்றது விவேகம்
சகோதயா கால்பந்து போட்டி; கோப்பை வென்றது விவேகம்
சகோதயா கால்பந்து போட்டி; கோப்பை வென்றது விவேகம்
சகோதயா கால்பந்து போட்டி; கோப்பை வென்றது விவேகம்
ADDED : செப் 26, 2025 05:34 AM

கோவை; சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில், 46வது கோயம்புத்துார் சகோதயா கால்பந்து போட்டி நடந்து வருகிறது; நாளை நிறைவடைகிறது. பள்ளிகளுக்கு இடையே மாணவர்களுக்கான இப்போட்டியில், 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 29 அணிகள், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 31 அணிகள் பங்கேற்றுள்ளன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடந்த இறுதிப்போட்டியில், விவேகம் சீனியர் செகண்டரி பள்ளி அணியும், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ். வி.எம்., பள்ளி அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் விவேகம் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், தி கேம்போர்டு சர்வதேச பள்ளி அணியும், கோவை சி.எஸ்., அகாடமி அணியும் மோதின.
இதில், 4-3 என்ற கோல் கணக்கில் தி கேம்போர்டு சர்வதேச பள்ளி அணி வென்று மூன்றாமிடம் பிடித்தது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன.