/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம் கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்
கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்
கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்
கோவையில் 30 வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கம் துவக்கம்
ADDED : ஜூன் 16, 2025 11:45 PM

கோவை; கோவையில் புதிய மினி பஸ் சேவையினை, நேற்று முதல்வர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
காந்திபுரம், ஆம்னி பஸ் ஸ்டாண்டில் நடந்த நிகழ்ச்சியில்,கோவை கலெக்டர் 30 புதிய மினி பஸ் சேவைகளை துவக்கி வைத்து, அனுமதி உத்தரவுகளை, பஸ் உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
விரிவாக்கம் செய்த, 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித்தடம் என மொத்தம் 30 வழித் தடங்களில், மினி பஸ் சேவை துவக்கிவைக்கப்பட்டது.
எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், இணைப்போக்குவரத்து கமிஷனர் அழகரசு, ஆர்.டி.ஓ.,க்கள் பிரதீபா, பூங்கோதை சத்தியகுமார், கோகுலகிருஷ்ணன், கோவை மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் நல சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.