/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க உத்தரவு சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க உத்தரவு
சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க உத்தரவு
ADDED : செப் 13, 2025 06:28 AM

கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2023ம் ஆண்டு ரூ.260.57 கோடி ஒதுக்கப்பட்டு, 3,432 எண்ணிக்கையிலான, 567 கி.மீ., துாரத்துக்கு சாலை மேம்பாட்டு பணிகள் துவங்கின.
இப்பணிகள் உட்பட கடந்த மூன்று ஆண்டுகளில், 5,215 எண்ணிக்கையில், 860.69 கி.மீ., துாரத்துக்கு ரூ.415.60 கோடியில் தார் ரோடு போடுவதற்கு, மாநகராட்சி திட்டமிட்டது.
இதில், 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்தாண்டு இறுதியில் கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், சாலை சீரமைப்பு பணிக்காக, ரூ.200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கினார்.
மோசமான மண் சாலைகள், தார் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிங்காநல்லுார், காமராஜர் சாலையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியை, ஆய்வு செய்தனர். சாலை சீரமைப்பு பணிகளை, விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.