/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 13, 2025 06:28 AM
கோவை; கோவை சின்னியம்பாளையம் புல எண் 237/2ல் செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 2257)க்கு பதிலாக, பேரூர் தாலுகா சுண்டக்காமுத்துார் புதுத்தோட்டத்தில், மதுக்கடை திறக்க, தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுண்டக்காமுத்துார் விவசாயிகள் கூறுகையில், 'குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளி அமைந்துள்ள பகுதியில் மதுக்கடை திறப்பது பேராபத்தை விளைவிக்கும். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு கூறியது. அதற்கு மாறாக வெவ்வேறு இடங்களில் மீண்டும் கடைகளை திறக்கிறது. சுண்டாக்காமுத்துார் புதுத்தோட்டத்தில் மதுக்கடை திறக்கக் கூடாது' என்றனர்.