/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம்
தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம்
தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம்
தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு தொகுப்பூதியம்
ADDED : செப் 23, 2025 08:35 PM
பொள்ளாச்சி,; தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்கப்படுவதாக, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேசிய அளவில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த, 2019ல் 20வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கடந்த, 2024, அக்., மாதம், 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முடிக்க, தாமதமானதால் கணக்கெடுப்பு சற்று தொய்வு அடைந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டன.
ஏப்., மாதம் மாவட்டங்களுக்கு இடையே ஒப்பீடு அறிக்கை தயாரித்து, அதன் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. பணிகள் முடிந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், மொத்த கால்நடைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விபரங்கள் விரைந்து வெளியிடப்படவும் உள்ளது.
அதேநேரம், பொள்ளாச்சி கோட்டத்தில், கணக்கெடுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்கப்பட்டும் வருகிறது.
கால்நடைத்துறையினர் கூறியதாவது: கால்நடை கணக்கெடுப்பு விபரம் தெரிந்தவுடன், அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும். அதேநேரம், கணக்கெடுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க மாநில அளவில், 2 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிராமப்புறங்களில் ஒரு வீட்டிற்கு 8 ரூபாய்; நகர்ப்புறமாக இருந்தால் ஒரு வீட்டிற்கு 9 ரூபாய் என கணக்கிட்டு, பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.