ADDED : செப் 23, 2025 08:39 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தில், ஸ்ரீநாராயண குருவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, நாராயண குரு தமிழக பேரமைப்பு தலைவர் செந்தாமரை, அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.
அதன்பின், அவரது வாழ்க்கை வரலாறு நினைவு கூறப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், பொள்ளாச்சி நாராயண குரு சமாஜ தலைவர் கொச்சப்பன், செயலாளர் சகாதேவன், பொருளாளர் கண்ணன், இன்டர்னல் ஆடிட்டர் சிவபாக்கியம், துணைத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.