/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டா விசாரணை நோட்டீஸ்: கோவை கலெக்டர் தகவல் பட்டா விசாரணை நோட்டீஸ்: கோவை கலெக்டர் தகவல்
பட்டா விசாரணை நோட்டீஸ்: கோவை கலெக்டர் தகவல்
பட்டா விசாரணை நோட்டீஸ்: கோவை கலெக்டர் தகவல்
பட்டா விசாரணை நோட்டீஸ்: கோவை கலெக்டர் தகவல்
ADDED : ஜூன் 19, 2025 05:22 AM
கோவை : நகர நிலவரித்திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையத்தில் கிரயம், பூர்வீகம் மூலம் பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்கான பட்டா கவுண்டம்பாளையம் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள, தனி தாசில்தார் நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
கலெக்டர் அறிக்கை:
கோவை மாநகராட்சி வார்டு எண் 3 க்கு உட்பட்ட பிளாக் 1 முதல் 70 வரை உள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, பட்டா விசாரணைக்கான நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.
நோட்டீஸ் பெற்றபிறகு கிரையப்பத்திரம், அசல் மற்றும் அதன் நகல், மூலப்பத்திரம் அசல் மற்றும் நகல் கிரையப்பத்திரத்தின் அசல் மற்றும் பிரதி வங்கியில் இருப்பின் வங்கிக்கடிதம், சொத்துவரி, வீட்டுவரி ரசீது, மின்கட்டண அட்டை, தண்ணீர்வரி ரசீது நகல், வாரிசு தாரராக இருப்பின் இறப்பு மற்றும் வாரிசு சான்று கோர்ட் உத்தரவு இருப்பின் அதன் நகல் வில்லங்கசான்று, ஆதார், வாக்காளர் அட்டை, மூன்று போட்டோக்கள் ஆகியவற்றை விண்ணப்பத்தோடு சமர்ப்பித்து பட்டா மாறுதல் செய்து பெற்றுக்கொள்ளலாம்.