/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரளி விதையை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு அரளி விதையை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு
அரளி விதையை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு
அரளி விதையை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு
அரளி விதையை அரைத்து குடித்தவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 19, 2025 05:21 AM
தொண்டாமுத்தூர் : ஆறுமுககவுண்டனூரில், மன அழுத்தத்தால் அரளி விதையை அரைத்து குடித்து, உயிரிழந்தார்.
ஆறுமுககவுண்டனூர், பொம்மநாயக்கர் வீதியை சேர்ந்தவர் திலகவதி, 58. தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பாஸ்கர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
திலகவதி, தனது இளைய மகனுடன் வசித்து, வேலைக்கு சென்று வந்தார். திலகவதிக்கு தைராய்டு பிரச்னை இருந்ததாலும், கணவர் உயிரிழந்ததாலும் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, வீட்டில் தனியாக இருந்த திலகவதி, மன அழுத்தத்தால், அரளி விதையை அரைத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள்,திலகவதியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்றுமுன்தினம் இரவு, உயிரிழந்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.