/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி
ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி
ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி
ஆள் இறங்கும் குழியில் கழிவுநீர் வெளியேறியதால் அவதி
ADDED : செப் 25, 2025 11:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில், பாதாளச்சாக்கடை திட்ட ஆள் இறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாததால், வாகன ஓட்டுநர்கள், கடை உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.
பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உள்ள ஆள் இறங்கும் குழிகளில் இருந்து அவ்வப்போது கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் சென்றது.
இது குறித்து கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, ''ராஜாமில் ரோடு மோசமாக உள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். இச்சூழலில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த நகர் நல அலுவர் தாமரைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை ஆய்வு செய்தனர். பின்னர், இயந்திரம் வர வைத்து துாய்மைப்படுத்தப்பட்டன.