/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 29ல் பி.எப். சந்தாதாரர் குறைதீர் கூட்டம் 29ல் பி.எப். சந்தாதாரர் குறைதீர் கூட்டம்
29ல் பி.எப். சந்தாதாரர் குறைதீர் கூட்டம்
29ல் பி.எப். சந்தாதாரர் குறைதீர் கூட்டம்
29ல் பி.எப். சந்தாதாரர் குறைதீர் கூட்டம்
ADDED : செப் 26, 2025 05:45 AM
கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து, சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், 'நிதி ஆப்கே நிகட்' என்ற பெயரில், குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 29ல் இக்கூட்டம் நடக்கிறது.
கோவையில் ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள பாரதிய வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கிலும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாவரவியல் பூங்கா அருகில் உள்ள ஹெப்ரான் பள்ளி லுஷிங்டன் ஹாலிலும் நடைபெறும்.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10.30 முதல் மாலை 5.30 மணி வரை நேரில் முறையிடலாம். யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன உத்தரவு எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம், என, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் (2) அனந்தராமன் தெரிவித்துள்ளார்.