/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கெடு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கெடு
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கெடு
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கெடு
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கெடு
ADDED : டிச 05, 2025 07:22 AM
கோவை: பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம் கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இளங்கலை முதுகலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000 -க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்கள் கல்லூரியின் ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, http://umis.tn.gov.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு இம்மாதம் 31ம் தேதி கடைசி என்று கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.


