/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி
பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி
பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி
பாம்பு பிடி வீரர் நாகம் தீண்டி பரிதாப பலி
ADDED : மார் 21, 2025 02:30 AM

கோவை:கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 39; திருமணமானவர். இவர், பாம்பு பிடிப்பதில் நிபுணர். கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜநாகம், நல்லபாம்பு, கட்டுவிரியன், கொம்பேறி மூர்க்கன் உள்ளிட்ட விஷம் நிறைந்த ஆயிரக்கணக்கான பாம்புகளை பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளார்.
கடந்த 17ம் தேதி, கோவை அருகே தொண்டாமுத்துார் குடியிருப்பு பகுதியில் புகுந்த நாகப்பாம்பை மீட்க சென்ற சந்தோஷ், பாம்பிடம் கடிபட்டார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இவரது குடும்பத்துக்கு, அரசு தரப்பில் உதவி செய்ய வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.