/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பயனில்லை; வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினர் தகவல் உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பயனில்லை; வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பயனில்லை; வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பயனில்லை; வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினர் தகவல்
உங்களுடன் ஸ்டாலின் முகாமால் பயனில்லை; வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பினர் தகவல்
ADDED : செப் 26, 2025 05:47 AM

கோவை; அவசர கதியில் நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாமால் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காது என, வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பான பெரா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் காத்திருப்பு போராட்டம் மற்றும் வேலைப்பளு காரணமாக இன்று முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு போராட்டத்தை பெரா நேற்று நடத்தியது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உசைன் கூறியதாவது:
வருவாய் துறை என்பது மக்கள் துறை. எங்கள் வேலை பளு பல மடங்கு அதிகரித்துள்ளது. எவ்வித திட்டமிடலும் இன்றி சிறப்பு திட்டங்களை அவசர கதியில் இத்துறையில் திணிக்கப்படுவதால், எங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறைந்தபட்ச கால அவகாசம் கூட வழங்கப்படுவதில்லை. அவசர கதியில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண நிர்பந்தப்படுத்தப்படுகிறது.
இதனால், எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொதுமக்களுக்கு நீரந்தர தீர்வு இருக்காது. முகாம்களில் பெறப்படும் மனுக்களை இரவுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நிர்பந்தம் செய்வது அனைத்து ஊழியர்களும் கடும் இன்னலை சந்திக்கின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது. திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால், அதை செயல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டியது அவசியம். காலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்துள்ளோம்.
கோவை மாவட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள, 750 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.