/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோ-ஆப்டெக்ஸில் ரூ.7.10 கோடிக்கு இலக்கு கோ-ஆப்டெக்ஸில் ரூ.7.10 கோடிக்கு இலக்கு
கோ-ஆப்டெக்ஸில் ரூ.7.10 கோடிக்கு இலக்கு
கோ-ஆப்டெக்ஸில் ரூ.7.10 கோடிக்கு இலக்கு
கோ-ஆப்டெக்ஸில் ரூ.7.10 கோடிக்கு இலக்கு
ADDED : செப் 26, 2025 05:28 AM
கோவை; கோவையில் வ.உ.சி., பூங்கா, ஆர்.எஸ்.புரம், காந்திபுரம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. 2024 தீபாவளி சமயத்தில், 4.70 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டுக்கான இலக்கு, 7.10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மருதம் கோ-ஆப்டெக்ஸில்நேற்று கலெக்டர் பவன்குமார் விற்பனையை துவக்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி கூறியதாவது:
30 சதவீத தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது. இந்தாண்டு புதிய ரக, டிசைன் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பட்டுப்புடவைகளில் உள்ள தங்க, வெள்ளி ஜரிகை எடை அளவு குறிப்பிட்டு கார்டு தருவதால், பல ஆண்டுகள் கழித்து விற்பனை செய்ய எளிதாக இருக்கும்.
சுருங்காத சட்டை, ஆர்கானிக் காட்டன் புடவைகள், மூங்கில் துண்டுகள், சுடிதார், பட்டுப்புடவைகள், பர்னிச்சர் பொருட்களில்பல புதிய வரவுகள் உள்ளன. அரசு, தனியார் நிறுவன பணியாளர்களுக்கு கடன் விற்பனை, பழைய பட்டுப்புடவை கொடுத்து புதிய புடவை பெறும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
கைத்தறி துறை உதவி இயக்குனர் கார்த்திகேயன், துணை மண்டல மேலாளர் லட்சுமி பிரபா, மருதம் விற்பனை மேலாளர் செல்வதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.