ADDED : செப் 26, 2025 05:29 AM
ஆன்மிகம்
நவராத்திரி பெருந்திருவிழா * ஒம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய திட்டம் - 2, சிட்கோ. அபிராமி அந்தாதி, திருப்பாவை, காலை 6 மணி. மகா பேரொளி வழிபாடு, மாலை 6.30 மணி. பிரசாதம் வழங்குதல், பக்தி பாடல்கள், இரவு 7 மணி.
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 6 மணி முதல்.
* விசாலட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார்.சாய் பஜன், மாலை 6.30 முதல் 8.30 மணி வரை.
* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். நவராத்திரி பூஜை, வைசாலி பூஜை, சுமங்கலி பூஜை, மாலை, 5 மணி.
* ஐயப்பசுவாமி கோவில், நியு சித்தாபுதுார். கானாஞ்சலி, நாட்டிய நிகழ்ச்சி, காலை 7.30 முதல் 10 மணி வரை.
* காமாட்சி அம்பாள் ஆலயம், ஆர்.எஸ்.புரம். பஜனை, மாலை, 5 மணி. இசை நகிழ்ச்சி, மாலை 6 மணி.
* சாரதாலயம், ரேஸ்கோர்ஸ். சஹஸ்ர மோதக ஹோமம், காலை 8.30 மணி. லட்சார்ச்சனை, காலை 9 மணி முதல்.
* பரிபாலன பேஸ் -3, காயத்திரி கோவில் பின்புறம், அஜ்ஜனுார், மாலை 6 மணி. ஏற்பாடு: ஸ்ருஜனா ஸ்கூல் ஆப் பரதநாட்டியம்.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி, மாலை 5.30 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
கல்வி தேசியக் கருத்தரங்கு * கே.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காமராஜர் ரோடு, வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரில், காலை 9.30 மணி. தலைப்பு: செயற்கை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம்.
* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்படம் n காலை 10 மணி. தலைப்பு: ஏரோபேஸ் பொறியியல்.
சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, பச்சாபாளையம், பேரூர் செட்டிபாளையம், கலை, 9 மணி.
கல்லுாரி கலைவிழா நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமலையம்பாளையம், காலை 10 மணி.
ஆசிரியர் மேம்பாட்டு பயிலரங்கு * ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, காலை 10 மணி.
* டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 10 மணி.
புத்தக கொலு வைபவம் பிஷப் அம்புரோஸ் கல்லுாரி, ரேஸ்கோர்ஸ், காலை 10 மணி.
பொது கொலு பொம்மைகள் கண்காட்சி எஸ்.கே.எஸ்., முத்துக்கள் மற்றும் கைவினை பொருட்கள், டவுன்ஹால். காலை 10 முதல் இரவு 10 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் * இரவு 7 முதல் 8:30 மணி வரை.