/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வந்ததே நொய்யலில் வெள்ளம்; மகிழ்ந்ததே மக்கள் உள்ளம்!வந்ததே நொய்யலில் வெள்ளம்; மகிழ்ந்ததே மக்கள் உள்ளம்!
வந்ததே நொய்யலில் வெள்ளம்; மகிழ்ந்ததே மக்கள் உள்ளம்!
வந்ததே நொய்யலில் வெள்ளம்; மகிழ்ந்ததே மக்கள் உள்ளம்!
வந்ததே நொய்யலில் வெள்ளம்; மகிழ்ந்ததே மக்கள் உள்ளம்!

நொய்யலில் வெள்ளப்பெருக்கு
கடந்த, 24ம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலம் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகியுள்ள, கிளை ஆறுகளில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
வாய்க்காலில் அடைப்பு
வேடப்பட்டி அருகே, நாகராஜபுரம் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது; மாநகராட்சியால் துார்வாரப்பட்டு, நரசாம்பதி குளத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதர்மண்டிய வாய்க்கால்
வினாடிக்கு, 75 கன அடி தண்ணீர் செல்லும் வகையில், மதகுகள் திறக்கப்பட்டன. ஆனால், செல்வபுரம் முத்துசாமி காலனி விரிவு பகுதியில், வாய்க்கால் புதர்மண்டிக் கிடக்கிறது; நாணல் புற்கள் வளர்ந்திருக்கின்றன. அவை அகற்றப்படாமல் இருந்தன. அப்பகுதியில் இருந்த அடைப்புகள், நேற்று அகற்றப்பட்டன. வாய்க்கால் தண்ணீர் பொங்கி, குடியிருப்புக்குள் புகும் சூழல் இருந்ததால், வினாடிக்கு, 50 கன அடியாக தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.