Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் உயிரிழப்பு

ADDED : அக் 14, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
கோவை;நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில், மூவர் பலியானார்கள்.

கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் நோக்கி, கார் ஒன்று அதிவேகமாக சென்றது.

பாலத்தில் இருந்து இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்த கார், அவிநாசி ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பகுதியில் மோதியது.

இதில் கார் முழுமையாக நொறுங்கி, லாரியின் அடியில் சிக்கியது. தகவல் அறிந்த பீளமேடு போலீசார் மற்றும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கார் அப்பளம் போல் நொறுங்கி காணப்பட்டது. உள்ளே மூவர் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.

தீயணைப்பு துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி, பொக்லைன் உதவியுடன் காரை வெளியே இழுத்து, உடல்களை மீட்டனர். போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்தனர்.

விசாரணையில், காரில் சென்றவர்கள், ஒண்டிபுதுாரை சேர்ந்த அசன் மகன் ஹாரிப், 20, ேஷக் பஷீர் மகன் ஷேக் உசைன், 20 மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகள் சத்யபிரியா, 17 எனத் தெரிந்தது.

கோவை பெரிய கடைவீதியில் உள்ள, துணிக்கடை ஒன்றில் ஹாரிப் பணிபுரிந்து வந்துள்ளார். ேஷக் உசைன் லாரி டிரைவராக பணிபுரிந்துள்ளார்.

கல்லுாரியில் பயின்று வந்த சத்யபிரியா, ஹாரிப் பணிபுரிந்த கடையின் அருகில் உள்ள மற்றொரு துணிக்கடையில், பகுதிநேரமாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர்கள் இரவில் எதற்காக, காரில் அவிநாசி மேம்பாலத்தில் சென்றனர் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us