Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒற்றை யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி: பாதுகாப்பு வழங்க கோரி மக்கள் மறியல்

ஒற்றை யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி: பாதுகாப்பு வழங்க கோரி மக்கள் மறியல்

ஒற்றை யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி: பாதுகாப்பு வழங்க கோரி மக்கள் மறியல்

ஒற்றை யானை தாக்கி பாட்டி, பேத்தி பலி: பாதுகாப்பு வழங்க கோரி மக்கள் மறியல்

ADDED : அக் 14, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
வால்பாறை;வால்பாறை அருகே, யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி பலியான சம்பவத்தை தொடர்ந்து, வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால்ஸ் உமையாண்டி முடக்கு, காடம்பாறை டிவிஷனில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி, இரண்டு குழந்தைகள், தாய் ஆகியோருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, வீட்டின் ஜன்னலை உடைத்தது. அப்போது மூன்று வயது பேத்தி ேஹமாஸ்ரீயுடன், பாட்டி அசாலா, 55, வெளியே எட்டி பார்த்த போது, மூதாட்டியை யானை தாக்கியது.

இந்த சம்பவத்தில், கீழே விழுந்த ேஹமாஸ்ரீயை யானை மிதித்து கொன்றது. படுகாயமடைந்த மூதாட்டி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா தலைமையிலான வனத்துறையினர், யானை தாக்கி உயிரிழந்த பாட்டி, பேத்தி ஆகியோரின் உடல்களை, வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, வனவிலங்கு - மனித மோதலை தடுக்க வேண்டும். கும்கி யானையை பயன்படுத்தி அப்பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும். கூடுதல் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், வாட்டர்பால்ஸ் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று மாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த, பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

யானை தாக்கியதில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்துக்கு, வனத்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மூதாட்டியின் வாரிசு சான்றிதழ் ஒப்படைத்த பின், உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us