ADDED : செப் 26, 2025 05:49 AM

தெ ன்னிந்திய சிற்றுண்டிகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், டாப் ஜி சிற்றுண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய சுவைகளில், புதுமையான திருப்பத்தை சேர்த்து, பிரீமியம் பேக்கேஜில் டாப் ஜி சிற்றுண்டிகள் கிடைக்கின்றன.
தரத்தில் சமரசமின்றி குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறந்ததை தேர்ந்தெடுப்பவர்களின் முக்கிய தேர்வாக டாப் ஜி இருக்கும். டாப்ஜியின் ஒவ்வொரு தயாரிப்பும் சுகாதாரம், சுவை மற்றும் நம்பிக்கையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்கின்றன.
டாப் ஜி, பல்வேறு அளவுகளில் ஐந்து தனித்துவமான தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய அளவிலான உற்பத்தி சவால்கள் காரணமாக வணிகச் சந்தைக்கு வராத, பாரம்பரிய, கையால் அரைக்கப்பட்ட வெங்காய வத்தல் சிற்றுண்டி கிடைக்கிறது.
மென்மையான இனிப்பு, வெண்ணெய் செழுமை, தேங்காய் நறுமணம் என சுவைகளின் நுட்பமான சமநிலை கொண்ட தேங்காய் பால் முறுக்கு குழந்தைகள் பெரிதும் விரும்புவார்கள். மேலும், மிளகு மற்றும் உப்பு, கிளாசிக் உப்பு மற்றும் டார்ங்கி பஞ்ச் என அனைத்து வயதினரையும் கவரும் வகையில் மூன்று சுவைகளில் வாழைப்பழ சிப்ஸ் கிடைக்கிறது.
- அனைத்து முன்னணி கடைகளிலும் டாப் ஜி தயாரிப்புகளை வாங்கலாம்.
- 99407 12887,0422 2990095