/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஜூன் 19, 2025 07:41 AM

வால்பாறை : வாழையை ருசிக்க வந்த ஒற்றை யானையை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் நேற்று முன் தினம் இரவு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, இரண்டு வீடுகளின் முன் பயிரிடப்பட்ட வாழைகளை ருசித்து உட்கொண்டது.
இரவு நேரம் என்பதாலும், பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், தொழிலாளர்கள் யானையை விரட்ட முடியாமல் பரிதவித்தனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'அக்காமலை எஸ்டேட் பகுதியில், யானை வரும் முன் ஓலி எழுப்பும் கருவி பழுதாகி பல மாதங்களாகிறது. இதனால் யானை இரவில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் தெரியவில்லை. பழுதடைந்த நிலையில் உள்ள ஒலி எழுப்பும் கருவியை உடனடியாக சரி செய்து, தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றனர்.